வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூரில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூரில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு 100 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பட்டாக்களை அடங்கல் ஏற்றாமல் இருந்து வருவதால் வங்கியில் லோன் பெறுவதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாத அந்த பட்டா இருந்து வருவதால் அத்தகைய பட்டாக்களை அடங்கலில் ஏற்றி புதிய பட்டா வழங்கிட வேண்டி போராட்டம் செய்தனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் காட்டுநாயக்கன் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட கோரி பலமுறை ஊத்துக்கோட்டை வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது இதனால் மாம்பாக்கம் கிராமத்தில் மாம்பாக்கம் முதல் பெரியபாளையம் செல்லக்கூடிய அரசு பேருந்தை கிராம மக்கள் சிறை பிடித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story