கலைஞர் "முத்தமிழ் தேர்" கரூருக்கு வருகை - ஆட்சியர் தகவல்

முத்தமிழ் தேர்
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில், தமிழக முதலமைச்சர் 12 குழுக்கள் அமைத்துள்ளார். அதில் ஒன்றாக ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில், கலைஞர் தமிழகத்திற்கு ஆற்றிய பணிகள், அவரது, பரிமாணங்களை போற்றிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறையினர்களுக்கு கலைஞரின் பன்முகத்தன்மையை எடுத்துக்கூறும் வகையில், எழுத்தாளர்- கலைஞர் குழுவின் சார்பில் ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த அலங்கார ஊர்தியில், பேனா வடிவில் வடிவமைக்கப்பட்ட முத்தமிழ்த்தேர் 04.11.23முதல் 05.12.23 வரை தமிழ்நாடு முழுவதும் பயணிக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 04.11.23 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்ட ஊர்தி வருகின்ற 24.11.23 அன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான புன்னம் சேரன் பள்ளி, கரூர் பேருந்து நிலையம், வேலாயுதம்பாளையஆகிய 3- இடங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு டாக்டர் கலைஞர் அவர்களின் படைப்புக்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
