வாக்கு எண்ணிக்கை மைய முகவர் இந்தியா கூட்டணி ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை மைய முகவர் இந்தியா கூட்டணி ஆலோசனை

இந்தியா கூட்டணி ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் தனியார் திருமண கூடத்தில் திமுக மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்வாறு சிறப்புற செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெற உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம்‌.முருகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார், எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

Tags

Next Story