மீண்டும் கல்வி கடன் பெற காங்கிரசிற்கு வாக்கு - ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமணி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். குளத்துப்பாளையம் பகுதியில் வந்த அவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய ஜோதிமணி, இதற்கு முந்தைய 10 ஆண்டுகால காங்கிரஸ் காங்கிரஸ் ஆட்சியில் லட்சக்கணக்கான மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது. உயர்கல்வி கற்ற பிறகு தற்போது வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளார்கள்.அதன் பிறகு கல்வி கடன் வழங்குவதை நிறுத்தி விட்டார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கிய கல்வி கடனுக்கு தற்போது ஜப்தி நோட்டீஸ் அனுப்பி வருகிறார்கள். கரூரில் நடைபெறும் டெக்ஸ்டைல் தொழிலில் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். ஜி எஸ் டி என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். தற்போது கரூர் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தொழில் வாய்ப்புகளை முடக்கி விட்டார்கள். இந்த நிலையை மாற்ற ராகுல் காந்தி பிரதமராகவும் மு க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தவும் அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.