மயிலாடுதுறையில் நடைப்பயண பேரணி

மயிலாடுதுறையில்  நடைப்பயண பேரணி

பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

மயிலாடுதுறையில் போதையில்லா சமூகத்தை உருவாக்க வலியுறுத்தி குழந்தைகள் விழிப்புணர்வு நடைப்பயண பேரணியை டிஎஸ்பி துவக்கி வைத்தார்.

போதையில்லா சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்க வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை பாலர் பூங்கா குழந்தைகள் நடை பயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சோழம்பேட்டை அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணியை மயிலாடுதுறை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதையில்லா சமூகத்தை உருவாக்குவது பற்றி பேசி பேரணியை துவங்கி வைத்தார்.

இந்த பேரணியில் குட்கா போன்ற புகையிலை பயன்படுத்தக்கூடாது, கஞ்சா புழக்கத்தை தடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி நடை பயண பேரணி நடைபெற்றது. இதில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, மதுப்பழக்கத்தால் மதியை இழக்காதே, குடி குடியை கெடுக்கும், மதுவை ஒழிப்போம், குடிப்பவனுக்கு கொண்டாட்டம் அவன் குடும்பத்திற்கு திண்டாட்டம், பிளாஸ்டிக்கை ஒழித்து துணிப்பைகளை பயன்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தி விழிப்புணர்வு முழக்கமிட்டவாறு

தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்டத்துடன் சிறுவர், சிறுமியர்கள் நடை பயணம் மேற்கொண்டனர்.இதில் இயற்கை விவசாயி ராமலிங்கம், சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story