வாட்சப் குரூப் ஆப்மூலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி
அறிக்கை
மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி - அதிகாரிகள் கலக்கம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி இந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று பதவியேற்றார். அரசு அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொள்வது சுணக்கமாகப் பணியாற்றும் அதிகாரிகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது, சண்டித்தனம் செய்யும் அதிகாரிகளை எச்சரித்துப் பணியாற்ற வைப்பது, அரசு அலுவலகங்களை சுகாதாரமாக வைக்க எச்சரித்து சரிசெய்தார்.
மயிலாடுதுறை நகரில் கொட்டிக் கிடந்த குப்பைகளை முதலில் அகற்ற வைத்தார். மக்கள் குறைதீர்கூட்டம் என்றாலே சம்பிரதாயத்திற்கு என்று நடந்த நிலையை மாற்றி அரசு அதிகாரிகளை கூட்டத்திலேயே பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணவைத்தார். விவசாயிகளது குறைகளை முடிந்த அளவில் தீர்த்துவைத்து அவர்களது நல்ல பெயரை வாங்கியது போன்ற என்னற்ற பணிகளை வெற்றிகரமாக முடித்துவைத்தார் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாமை திருவிழாபோல் ஆக்கினார்.
பொதுமக்கள் அலையாமல் வீட்டிலிருந்தபடியே குறைகளை 70 92 25 52 55 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பினால் உரிய பதிலை உரிய துறையினர் அளிக்கும் வசதியை ஏற்படுத்தியிள்ளார். அதற்காக வசதியை ஏற்படுத்தி 4 அதிகாரிகளை நியமித்து இன்று அறிவித்துள்ளார். இந்த வாட்சப் சேவை, எந்த நேரமும் தனது கண்காணிப்பில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதனால் பல அதிகாரிகள் ஒருவித கலக்கத்தில் உள்ளனர்.