மயிலாடுதுறை அருகே களைகட்டிய கலை விழா

மயிலாடுதுறை அருகே களைகட்டிய கலை விழா

கலைத்திருவிழா 

மயிலாடுதுறை அருகே மாவட்ட அளவிலான கலை திருவிழா களைகட்டியது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா கடந்த 26 -ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்று வந்தது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள 489 அரசு பள்ளிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். நடனம், பாட்டு, இசை, கவின் கலை, நுண்கலை, ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி, நாடகம், கருவி இசை, மொழித்திறன் போட்டி, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட தனி மற்றும் குழு திறனை வெளிப்படுத்தும் விதமாக 81 வகையான போட்டி நடத்தப்பட்டது 2051 மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்றும் மாணவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Tags

Next Story