தரங்கம்பாடி அருகே விபத்தில் சிக்கிய மேற்குவங்க தொழிலாளி பலி

தரங்கம்பாடி அருகே விபத்தில் சிக்கிய மேற்குவங்க தொழிலாளி பலி

பலியான தொழிலாளி

தரங்கம்பாடி அருகே மகிமலையாற்றில் சட்ரஸ் கட்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி ஒருவர் பலியானர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கண்ணப்பன் மூலை என்ற இடத்தில் உள்ள மகிமலை ஆற்றில் சட்ரஸ் (நீரொழுங்கி) அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் பணிகளை செய்து வருகிறது.

இன்று 15 நபர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த தனியார் இன்ஜினியர் அருண்ராம் முன்னிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சௌரவ் கங்குலி, ராகுல் மேஸ்ட்ரி, பாகர் அலி, சுமர் அலி, ஆகிய நான்கு பேர் ஆற்றின் கீழே இறங்கி சட்ரஸ் சுவர் எழுப்ப ஆங்கில் மற்றும் இரும்பு தகரம் கொண்டு சென்ட்ரிங் அடிக்கும் பணியை செய்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மேலிருந்து மண் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தெற்கு பர்குநாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமர்அலி சிக்கி கழுத்து மற்றும் முகத்தில் சென்ட்ரிங் இரும்பு பலகை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற மூவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர்த்தப்பினர். இச்சம்பவம் அறிந்த பொறையார் போலீசார் இறந்த சுமர் அலி உடலை கைப்பற்றி பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுமர் அலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story