பிடிபட்ட 350 கோடி ரூபாய்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன தொடர்பு?- ஏ.பி. முருகானந்தம்
பிடிபட்ட 350 கோடி ரூபாய்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன தொடர்பு? பிஜேபி ஏ.பி.முருகானந்தம் கேள்வி
கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியில், ஊழலில் காங்கிரஸின் பங்களிப்பை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினரிடம் இருந்து, இந்தியாவே மலைத்து போகும் அளவுக்கு, 350 கோடி ரூபாய் ரொக்கமாக பிடிபட்டுள்ளது. இந்த ஊழல் பணத்தில், காங்கிரஸ் கட்சிக்கும்,சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோருக்கு என்ன தொடர்பு இருக்கிறது? அதனுடைய தலைவர்களுக்கு எத்தனை ஆயிரம் கோடி வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பாக, அனைத்து விபரங்களையும் மக்கள் மன்றத்தில் வைப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக தெரிவித்தார்.
Tags
Next Story