குழந்தையை அழைத்துச் செல்ல காத்திருந்த போது, கார் மோதி விபத்து

பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்துச் செல்ல காத்திருந்த போது, வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா, ஆத்தூர், பெரிய வடுகப்பட்டி அருகே குடி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 32.இவரது மனைவி வனிதா வயது 31. இவர்களது குழந்தை வெண்ணமலை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

டிசம்பர் 22ஆம் தேதி மதியம் 3:30-மணி அளவில் இவர்களது குழந்தையை அழைத்து வர வனிதா டூவீலரில் சென்று உள்ளார். பள்ளிவிடும் வரை காத்திருப்பதற்காக வெண்ணமலை சந்திப்பு அருகே சாலையின் ஓரம் தனது டூவீலருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே சாலையில் கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஹரிஹர பவன் பகுதியைச் சேர்ந்த மிதுன்லால் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மாருதி சுசுகி ஸ்விப்ட் கார், சாலையோரம் நின்ற வனிதா மீது மோதியது.

இந்த விபத்தில் வனிதாவிற்கு வலது புற தலை, வலது புற கால் முட்டி மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த வனிதாவின் கணவர் ராஜ்குமார், இது குறித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர். விசாரணையின் முடிவில்,காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டிய மிதுன்லால் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர், வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story