2024க்கு பிறகு இந்தியாவில் தேர்தல் நடக்குமா? காங் வேட்பாளர் கேள்வி

2024க்கு பிறகு இந்தியாவில் தேர்தல் நடக்குமா? என கரூரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று தாந்தோணி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டாள் கோவில் கிழக்கு ஆண்டாள் கோவில் மேற்கு ஊராட்சி பகுதிகளில் இன்று திறந்த ஜீப் வாகனத்தில் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் வந்து வாக்கு சேகரித்தனர். வாக்கு சேகரிக்கும் பகுதிகளில் எல்லாம் திரண்டு இருந்த பொதுமக்கள் ஏழு மணிக்கு ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது அங்கு கூட இருந்த பொதுமக்களிடையே பேசிய ஜோதிமணி, நம்மளுடைய தேர்தல் அறிக்கையில் கல்வி கடனை ரத்து செய்வோம் புதிதாக கல்வி பயில்வதற்கு கடன் வழங்குவோம் என கூறியுள்ளோம்.

ஏனெனில் நமக்கு தேவையானது கல்வி, வேலை வாய்ப்பு, சிறுகுறு தொழில் மற்றும் விவசாயம் சிறப்படைய வேண்டும். நடைபெற உள்ள தேர்தல் இதுபோல் இனிமேல் நடக்குமா? அல்லது 2024 தான் இறுதித் தேர்தலாக அமையுமா? என தெரியாது.ஏன் என்றால் அந்த அளவுக்கு நாட்டின் நிலவரம் மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story