மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது
கரூர் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது. காவல்துறை நடவடிக்கை.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முரளி கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்ச் 12ம் தேதி மாலை 5:30- மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த, கரூர், அண்ணா வளைவு, ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் மனைவி சகுந்தலா வயது 48 என்பவர் நடத்தி வந்த மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சகுந்தலா விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல் துறையினர்.
Next Story