ஆத்தூரில் தடை செய்த புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது

ஆத்தூரில் தடை செய்த புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது

காவல் நிலையம்

ஆத்தூரில் தடை செய்த புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

ஆத்தூரில் தடை செய்த புகையிலை பொருட்களை விற்ற பெண் கைது. கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிகுமாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ஜூன் 26 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் ஆத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் ஆத்தூர், குடி தெருவை சேர்ந்த பழனிச்சாமி மனைவி சம்பூர்ணம் வயது 61 என்பவர், அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ஹான்ஸ், கூல்லிப்,

விமல் பாக்கு உள்ளிட்ட ரூபாய் 486 மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக சம்பூரணத்தை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த வாங்கல் காவல்துறையினர் பின்னர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story