மைக்ரோ நிதி நிறுவன ஊழியர்கள் நள்ளிரவில் டார்ச்சர் செய்ததால் பெண் தற்கொலை

மைக்ரோ நிதி நிறுவன ஊழியர்கள் நள்ளிரவில் டார்ச்சர் செய்ததால் பெண் தற்கொலை

பெண் தற்கொலை

மயிலாடுதுறையில் நிதி நிறுவன ஊழியர்கள் நள்ளிரவில் தவணை கட்டாத பெண்ணுக்கு கொடுத்த டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மயிலாடுது போலீசார் விசாரணை செய்து நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை திருவாரூர் சாலை கேணிக்கரை ஸ்ரீநகர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி (33). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தையல் கடை வைத்து நடத்தி வந்த மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது மனைவி ஜெயலட்சுமி மைக்ரோ நிதி நிறுவனங்களில் நிதி பெற்று செலவு செய்து கணவரை காப்பாற்றினார். மீண்டும் தையல் தொழில் செய்ய முடியாத நிலையில் மணிகண்டன்மதுரையில் பழக்கடையில் வேலை செய்து வருகிறார். வாங்கிய கடனுக்கு தவணை செலுத்தி வந்த ஜெயலட்சுமி கடந்த சில வாரங்களாக தவணை பணம் செலுத்த முடியாமல் தவித்துவந்துள்ளார். தனியார் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் இரவு நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு திட்டியுள்ளனர். பணம் வாங்காமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று அதே தெருவில் முகாமிட்டிருந்தனர். இதைக்கண்ட ஜெயலட்சுமி உடனடியாக புறப்பட்டு கும்பகோணம் சென்று அங்கே தன சகோதரியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் சகோதரி கைவிரித்துவிடவே வரும் வழியில் தன் கணவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை சொல்லி அழுதுள்ளார். நாளை பணம் அனுப்பிவிடுகிறேன் என்று அவர் கணவர் தெரிவித்துள்ளார். இரவு 12 மணிக்கு கவலையுடன் வீட்டுக்கு சென்ற விஜயலட்சுமி அங்கே நிதிநிறுவன ஊழியர்களைக் கண்டு பயந்து வீட்டுக்குள் சென்று தூக்கு போட்டு இறந்து விட்டார், இதைக் கேள்விப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். மயிலாடுதுறை போலீசார் ஜெயலட்சுமி உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமியின் கணவர் மணிகண்டன் மறுநாள் மயிலாடுதுறைக்கு வந்து கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் வேலு குபேந்திரன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மைக்ரோ நிதி நிறுவனங்களால் தற்கொலைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறையில் இது நான்காவது சாவாகும். மயிலாடுதுறை போலீசார், இறந்து போன ஜெயலட்சுமி செல்போனில் உள்ள நிதி நிறுவன ஊழியர்களது செல்போன் உரையாடல் பதிவினை பெற்று விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Tags

Next Story