நாட்டுப்புற பாடல் பாடியபடி நடவு பணி மேற்கொண்ட பெண்கள்

நாட்டுப்புற பாடல் பாடியபடி நடவு பணி மேற்கொண்ட பெண்கள்

நடவு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் 

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் குறுவை நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்  நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களை ராகத்தோடு  பாடி உற்சாகத்தோடு நாற்று நடும் பணியில் சிரித்த முகத்துடன் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். மும்முனை மின்சாரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாய பணியில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து வரும் கோடை மழை குறுவை பணிக்கு ஏற்புடையதாக உள்ளதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணியை மும்முரமாக தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை சுற்றியுள்ள கிராமங்களில் வயல்களை சமன் செய்து நாற்றாங்காளில் முளைத்த நாற்றுகளை வயலில் தற்போது நடவு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மன்னம்பந்தல் பகுதியில் நாற்று நடவு பணி செய்யும் பெண்கள் தங்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், பணி சுணக்கமின்றி நடவு செய்யவும் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களை அழகிய ராகத்தோடு பாடி உற்சாகத்தோடு நாற்று நடும் பணியில் சிரித்த முகத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story