கந்துவட்டியாலும் போலீசாராலும் அலைகழிக்கப்படும் பெண்கள்

கந்துவட்டியாலும் போலீசாராலும் அலைகழிக்கப்படும்  பெண்கள்

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பெண்கள்

கந்துவட்டியாலும் போலீசாராலும் அலை கிடைக்கப் படும் பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அப்புராஜபுத்தூரை சேர்ந்த அபிநேஷா என்பவர் மயிலாடுதுறை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. ஆசிரியரான அமிர்தராஜன் என்பவர் தனது மகள் அபிநேஷாவின் விபத்து செலவிற்காக பொறையார் கல்லுரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றிவந்த குறிச்சி கந்துவட்டி ராமலிங்கம் என்பவரிடம் ரூ.1 லட்சம் வெற்று காசோலையை அளித்து பணத்தை வாங்கி செலவு செய்துள்ளார்.

இரண்டரை ஆண்டுகள் 3 பைசா வட்டியை கட்டியும் அசலைக் கொடுக்க முடியவில்லை. 2008ஆம் ஆண்டு அமிர்தராஜனைக் காரில் கடத்திச் சென்று வீட்டை கிரய சாசனம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டனர்.

அமிர்தராஜின் வீட்டுப் பத்திரம் வங்கியில் உள்ளது ஆனால் அதை மறைத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பத்திரப்பதிவு செய்ய உத்தரவும் வாங்கியுள்ளார், வீட்டைக் காலிசெய்வதற்கு பொறையார் காவல்நிலையத்திலிருந்து சட்டத்திற் குப் புறம்பாக போலீசாரை அழைத்துவந்து அமிர்தராஜ்குடும்பத்தாரை விரட்டியடித்துள்ளனர்.

சொந்தவீட்டை விட்டு அனாதைகளாக அலைவதாக அமிர்தராஜ் மனைவி மகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து தாங்கள் ஏமாற்றப்பட்டதற்கு உரிய விசாரணை வைத்து நியாயம் பெற்றுத்தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

ராமலிங்கம் என்பவர் டெல்டா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து பலரது சொத்துக்களை அடைந்துள்ளார் என கூறப்படுகிறது.

Tags

Next Story