அனைத்து மகளிர் காவலர்களை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போராட்டம்

அனைத்து மகளிர் காவலர்களை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போராட்டம்

போராட்டம்

புகார் அளித்து இரண்டு மாதமாக நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் முன்பாக பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தாருடன் தர்ணா போராட்டம்.
மயிலாடுதுறை அருகே செங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுகப்பிரியா நேத்து நடத்திய போராட்டத்தில் விளைவாக காதலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க நிலையில் பெரம்பூர் போலீசார் சிவப்பிரியா மற்றும் அவரது உறவினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சுகப்பிரியா மற்றும் அவரது உறவினர்கள் இன்று(19-2-24) மாலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். சுகப்பிரியா இது குறித்து கூறுகையில் ஏழு ஆண்டுகளாக பழகி இரண்டு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டது. வெளிநாடு சென்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினோத் ஊர் திரும்பினார் . மீண்டும் பழகியதில் கர்ப்பமடைந்தால் கோயிலில்வைத்து தாலிகட்விட்டு கருவை கலைக்க வேண்டுமென்று வினோத், அவரது தாயார், சகோதரிகள் கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்துவிட்டனர். திருமணம் செய்ய மறுப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தும் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் பேச்சுவார்த்தை நடத்தசொல்லி காலம் தாழ்த்தினர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி நான் சென்றபோது வீடு பூட்டியிருந்ததால் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினேன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதோடு வினோத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் என்னை காதல் கணவருடன் சேர்த்துவைக்க வேண்டும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், எதிர்தரப்பு வக்கீல், வினோத்தின் . Withதாய், சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.உடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து கலெக்டர் மகாபாரதி பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

Tags

Next Story