உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு போராட்டம் அனுமதி மறுப்பால் ரத்து.

வெண்ணைமலை தொழிலாளர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த போராட்டம் காவல்துறை அனுமதி மறுப்பால் ரத்து செய்யப்பட்டது.
வெண்ணைமலை தொழிலாளர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த போராட்டம் காவல்துறை அனுமதி மறுப்பால் ரத்து. கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில், நாளை மே 23ஆம் தேதி காலை 11 மணியளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போதும் அமுலில் உள்ளதால், போராட்டத்திற்கு அனுமதி அளிக்க இயலாது என வெங்கமேடு காவல்துறையினர் தெரிவித்ததன் காரணமாக, இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story