உலக மண் தினம்... நடமாடும் மண் பரிசோதனை நிலையம்

உலக மண் தினம்...  நடமாடும் மண் பரிசோதனை நிலையம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டார்

வேளாண்மையில் அதிக மகசூல் பெறுவதற்கு பல காரணங்களில் மண் முதன்மையானது. மண்ணில் உள்ள சத்துகளின் தன்மை, அவற்றை பயிர்கள் எடுத்துக்கொள்ளும் அளவு, சத்துக்கள் பயிர்களுக்கு, கிடைக்கும் அளவு, களர், உவர் மற்றும் அமிலத்தன்மைகள் ,முதலியவை முக்கிய பங்கு அளிக்கின்றன. மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின், அளவை அறிந்திடவும், பயிர்களுக்கு தேவையான ,உர அளவை அறிந்தடவும், மண்ணில் உள்ள களர், உவர், அமிலத்தன்மைகளை அறிந்து, தக்க சீர்திருத்தம் செய்திடவும், தேவைக்கேற்ப உரமிட்டு ,உரச்செலவை குறைப்பதற்கும், இடும் உரம் பயிருக்கு, முழுமையாக கிடைப்பதை அறிந்தடவும், உரச்செலவை, குறைத்து அதிக மகசூல் பெற்றிடவும் , மண் பரிசோதனை மிகவும் இன்றியமையாததாகும்.

இன்று உலக மண் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில், விவசாயிகள் மண் பரிசோதனை செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, தங்களது விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்த விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா , தமிழ் செல்வன், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி யுரேகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன், ஆகியோர் கொண்டனர்.

Tags

Next Story