கரூரில் இளம் பெண் தற்கொலை முயற்சி
காவல் நிலையம்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் அருகே பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருபவர் நவீன் மனைவி சௌமியா.
கடந்த 2019 ஆம் ஆண்டு சௌமியா துறையூருக்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ளார். அங்கு பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலம், அவ்வை நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த, சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் வினிஷ் சுஜன் என்பவரை சந்தித்துள்ளார்.
அதன் பிறகு இருவரும் தொடர்ந்து சந்தித்து பேசியதால், இவர்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டது. இந்த தகாத உறவை அறிந்த ரம்யாவின் உறவினர் கிஷோர், வினிஸ் சுஜித்தை எச்சரித்தார். இதன் காரணமாக கடந்த ஆறு மாதமாக சௌமியா வினிஸ் சுஜனை சந்திக்காமல் இருந்துள்ளார்.
இதனிடையே வினி சுதன் ஜனவரி 13ஆம் தேதி மதியம் மூன்று மணி அளவில் சௌமியாவை சந்திக்க கரூருக்கு வந்துள்ளார். சௌமியா சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வினிஸ் சுஜன் அவருடன் தொடர்பில் இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார்.
இதனை அறிந்த சௌமியாவின் உறவினர் கிஷோர் வினிஸ் சுஜனுடன் தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சௌமியா உடனே தனது இடது கை மணிக்கட்டை கத்தியால் அறுத்துள்ளார்.
உடனே அவரை அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சௌமியாவின் கணவர் நவீன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தகாத உறவை ஏற்படுத்தி தகராறில் ஈடுபட்ட வினி சுஜனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
தகாத உறவு அம்பலமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.