சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த வாலிபர் கைது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மே ஒன்றாம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வையாபுரி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது வையாபுரி நகர் ஃபர்ஸ்ட் கிராஸ் பகுதியில் பொன்னுச்சாமி வயது 38 என்பவர் நடத்தி வரும் டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. மேலும், விற்பனைக்கு வைத்திருந்த எட்டு ஹான்ஸ் பாக்கெட்டுகள், இரண்டு கூல் லிப் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக பொன்னுசாமியை கைது செய்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.