கஞ்சா பதுக்கி வைத்த வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ரூபினிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மே 1-ம் தேதி மதியம் 3- மணி அளவில் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அருகில் உள்ள குப்பைமேடு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் தெற்கு, நெரூர், என்.புதூர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் ஷங்கர் வயது 38 என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பதுக்கி வைத்திருந்த ரூபாய் 500 மதிப்புள்ள 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சங்கர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.