கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது.
கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லைக்கரசிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தாந்தோணிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஊரணி காளியம்மன் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் அப்பகுதியில் சென்று சோதனை இட்டபோது, ரூபாய் 700 மதிப்புள்ள 70 கிராம் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்,இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, தாந்தோணி மலை, தெற்கு கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் முகேஷ் வயது 20 என்பவர் பதுக்கி வைத்தது தெரியவந்தது. எனவே முகேஷ் -ஐ கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.