கரூரில் டூ வீலரை களவாடிய வாலிபர் கைது.

கரூர் காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி வயது 42. இவர் லாலாபேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நவம்பர் 5ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கரூர் - கோவை சாலையில் உள்ள சத்யா ஏஜென்சி அருகே தனது டூவீலரை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி உள்ளார். பொருட்களை வாங்கிகொண்டு திரும்ப வந்து தனது வாகனத்தை எடுக்க முற்பட்டபோது, தனது வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் தனது வாகனம் குறித்து விசாரித்த போது, அது குறித்து எந்த தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் தனது டூவீலர் களவாடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கரூர் மாநகர காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போது, டூவீலரை நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர், முதலியார் தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் கணேசன் வயது 33 என்ற நபர் களவாடியது தெரியவந்தது.

எனவே, கணேசனை கைது செய்த காவல்துறையினர், அவர் களவாடி சென்ற அந்த டூவீலரை மீட்டனர். களவாடப்பட்ட இந்த வாகனத்தின் மதிப்பு ரூபாய் 60,000 இருக்கும் என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக கணேசன் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story