ரமலான் திருநாளில் இளைஞர்கள் கொண்டாட்டம் !
ரமலான்
குத்தாலம் அருகே முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் முதல் பிரை தினத்தில் ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை பகுதியில் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் 500 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பள்ளிவாசல் இமாம் ஷேக் முகமது ரஹீமீ தலைமையில் நடைபெற்ற தொழுகையில் உலக நன்மை வேண்டியும் , உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் ஏராளமானோர் இறைவனை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி , கைக்கூலுக்கி ரமலான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஏராளமான இளைஞர்கள் தங்களது நீண்ட நாள் நண்பர்களை சந்தித்ததையடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story