திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இளைஞர் தற்கொலை

திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில்  இளைஞர் தற்கொலை

தற்கொலை 

கரூர் அருகே திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், திருவள்ளூர் நகர் , எல் என் எஸ் போஸ்ட் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ஆனந்து வயது 43. இவர் அண்மை காலமாக, கரூர் அருகே சின்ன கோதூர் பகுதியில் வசித்து வந்தார். இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. 43 வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் வாழ்ந்து வந்த ஆனந்து, மே 7-ம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் யாரும் இல்லாததால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியாமல் போனது. இதனிடையே மே ஒன்பதாம் தேதி வீட்டிற்கு சென்ற ஆனந்துவின் தந்தை முருகன், தன் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஆனந்துவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story