அரசு பேருந்து மோதி இளைஞர் பலி

அரசு பேருந்து மோதி இளைஞர் பலி
X

காவல் நிலையம் 

வடக்குபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள ராணி மெய்யம்மை காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோ மகன் சதீஷ்குமார் 25. சதீஷ்குமார், தனது டூவீலரில் திருச்சி- கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் வடக்கு பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் ஈரோடு மாவட்டம், எஸ்.புதூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் 50 என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, சதீஷ்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சதீஷ்குமாரின் தந்தை இளங்கோ பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story