கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து இளைஞர் எழுச்சி படையினர் ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
மயிலாடுதுறையில் கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்களுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து இளைஞர் எழுச்சி படையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு இளைஞர் எழுச்சி படை சார்பில் கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்களுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் காசி.புதியராஜா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் மாநில பொதுச் செயலாளர்கள், மாநில பொருளாளர்கள், துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story