நதிகள் இணைப்பு குறித்து பாஜக பேச மறுப்பது ஏன்- ஈஸ்வரன் கேள்வி.

நதிகள் இணைப்பு குறித்து பாஜக பேச மறுப்பது ஏன்- ஈஸ்வரன் கேள்வி.


ஈஸ்வரன் எம். எல்.ஏ


மக்களவை தேர்தலில் நதிகள் இணைப்பு குறித்து வாக்குறுதி அளித்த பாஜகவினர் தற்போது அதை பற்றி ஏன் பேச மறுக்கின்றனர் என கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம்,கரூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் நேற்று கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2014- தேர்தலின் போது பிரதமர் மோடி கங்கை- காவிரி இணைப்பு திட்டம் குறித்து தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். 2019 ஆம் ஆண்டு கோதாவரி இணைப்பு திட்டம் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தவர்கள், அந்தத் திட்டம் குறித்து எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்கவில்லை. தற்போது 2024 எதை இணைக்க போகிறார்கள் என எனக்கு தெரியவில்லை. பல்வேறு விஷயங்களுக்கு பேசும் பிஜேபி தலைவர்கள், நதிகள் இணைப்பு திட்டம் குறித்து பேச மறுக்கிறார்கள் என்றார்.






Tags

Next Story