பொள்ளாச்சி அருகே மழை வேண்டி தண்ணீரை நிரப்பி கருவறையை மூடி வினோதா வழிபாடு

பொள்ளாச்சி அருகே மழை வேண்டி தண்ணீரை நிரப்பி கருவறையை மூடி வினோதா வழிபாடு

கருவறையில் தண்ணீர் நிரப்புதல்

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் மழை பெய்ய வேண்டி மழை உணவு உண்டு சாமி சிலை மூல்க தண்ணீர் நிரப்பி கருவறையை மூடி கும்மியடித்து மழை வேண்டி வினோத வழிபாடு செய்த கிராம மக்கள்.

தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சரியான மழைப்பொழிவு இல்லாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுவதால் பொதுமக்கள் குடிப்பதற்கு மற்றும் விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்துள்ள சாத்து பாறை சித்தூர் பகுதியில் தங்கள் முன்னோர்கள் மழை வேண்டி கடைபிடிக்கப்பட்ட வினோத வழிபாட்டை இன்று அந்த கிராமம் ஒன்று கூடி வழிபாடு செய்துள்ளனர்.. இந்நிலையில் அந்த கிராம மக்கள் கூறுகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் கடுமையான வறட்சி ஏற்பட்டு மழைப்பொழிவு இல்லாத நிலை ஏற்பட்டதால்,

தங்களது முன்னோர்கள் கோவிலில் உள்ள சிலை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை நிரப்பி கருவறையை மூடி அந்த கிராமத்தில் உள்ள அனைவரது இல்லத்திலும் உணவுப் பொருட்களை பெற்று அன்னதானம் வழங்கி மழை பெய்ய வேண்டும் என வணங்கி வந்த நிலையில் உடனடியாக மழை பெய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கிராம மக்கள் மழை பெய்ய வேண்டி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையை தண்ணீர் ஊற்றி முழுவதுமாக மூடி மேலும் கருவறை முழுவதுமாக தண்ணீரை நிரப்பி கருவறையை மூடி மழை வேண்டி வழிபாடு செய்தனர்.

அதேபோல் இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அரிசி பருப்பு, மிளகாய், உப்பு,புளி,உள்ளிட்ட பொருட்களை அனைத்து வீடுகளிலும் இருந்து பெறப்பட்டு அதை கோவிலில் வைத்து சமைத்து மழை உணவாக அனைவருக்கும் வழங்கப்பட்டு பெண்கள் கும்மி அடித்து மழை வர வேண்டுமென வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில் தங்கள் முன்னோர்கள் இதேபோன்று கடைப்பிடித்ததன் மூலமாக மழை பெய்ததாக ஐதீகம் உள்ளது இதை நாங்கள் பல ஆண்டுகளாக காதுகளால் மட்டுமே கேட்டு வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை போக்க முன்னோர்கள் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த மழை உணவை சாப்பிட்டு கோவில் முழுவதும் தண்ணீர் ஊற்றி அடைத்து உள்ளதாகவும்,

இதனால் எங்களுக்கு கண்டிப்பாக கூடிய விரைவில் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story