மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு ஆசிரியருக்கு 25 ஆண்டு சிறை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  அரசு ஆசிரியருக்கு 25 ஆண்டு சிறை

பைல் படம்

மயிலாடுதுறை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த திருவிளையாட்டம் மெயின் ரோட்டை சேர்ந்த சக்திதாஸ் மகன் நாராயணபிரசாத் (57 )என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இளவரசன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாராயண பிரசாத் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை (பிப்‌21) முடிவுக்கு வந்தது.

அரசு தரப்பில் உரிய விசாரணை செய்யப்பட்டு சாட்சியங்கள் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி மணிவண்ணன் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 70,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து குற்றவாளி கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் வழக்கறிஞராக அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் கனிமொழி ஆஜரானார் என்பதும், வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் நாகவல்லி மற்றும், நீதிமன்ற அலுவலர் பெண் தலைமை காவலர் வாலண்டினா ஆகியோர்கள் செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story