சர்ச் கட்டிடத்திற்கு வந்து நல்ல பாம்பு

சர்ச் கட்டிடத்திற்கு வந்து நல்ல பாம்பு
X

சர்ச் கட்டிடத்திற்கு வந்து நல்ல பாம்பு

மயிலாடுதுறை அருகே சர்ச் கட்டிடத்திற்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்து பாம்பு பிடி வீரர்கள் அப்புறப்படுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆக்கூர் நிலா நகரில் புதிதாக கிறிஸ்தவ வழிபாட்டு தலம் (சர்ச்) கட்டப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்ட மரப்பலகைகள் கட்டடத்தின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த சர்ச்சுக்கு வழிபாட்டுக்காக வந்த பொதுமக்கள் நல்லபாம்பு ஒன்று உள்ளே புகுந்து, மரப்பலகைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டதை பார்த்து உள்ளனர். வெகு நேரமாக விரட்டியும் பாம்பு வெளியேறாததால் சீர்காழியை சேர்ந்த பாம்புப்பிடி வீரரான ஸ்நேக் பாண்டியன் என்பவருக்கு சர்ச் நிர்வாகிகள் தகவல் தந்துள்ளனர். இதையடுத்து அங்கே வந்த பாண்டியன், மரப்பலகைகளை அகற்றி உள்ளே ஒளிந்திருந்த 5 அடி நீல நல்ல பாம்பை லாவகமாக பிடித்து மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags

Next Story