ஆதீனத்தின் ஆபாச வீடியோ வழக்கில் மூன்று பேருக்கு ஜாமீன் மறுப்பு

ஆதீனத்தின் ஆபாச வீடியோ வழக்கில் மூன்று பேருக்கு ஜாமீன் மறுப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறிக்க முற்பட்ட கும்பலுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறிக்க முற்பட்ட கும்பலுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை காட்டி 7 பேர் கொண்ட கும்பல் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரியிடம் மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டு பணம் பறிக்க முற்பட்டதாக விருத்தகிரி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் . அதில் தஞ்சை பாஜக வடக்கு மண்டல பொதுச் செயலாளர் வினோத் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம்,, விக்கி, ஸ்ரீநிவாஸ், குடியரசு செந்தில், விஜயகுமார் ஜெயச்சந்திரன் மற்றும் பிரபாகரன் ஆகிய 9பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வினோத்,விக்கி, ஸ்ரீனிவாஸ், குடியரசு, ஆகிய நான்கு நபர்களை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

முக்கிய நபரான மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை தனிப்படை போலீசார் மும்பையில் பிடித்துக் கொண்டு வந்து அவரையும் சிறையில் அடைத்துள்ளனர். கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத்திற்கு ஆதரவாக சுரேஷ் என்ற வழக்கறிஞரும் குடியரசுவுக்கு ஆதரவாக விஜய் பிரகாஷ் என்ற வழக்கறிஞரும் அகோரத்திற்கு பாரி என்ற வழக்கறிஞரும் ஆஜராகி மூவரையும் ஜாமீனில் விடுவிக்க கோறியிருந்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி மனுக்களை விசாரித்து தள்ளுபடி செய்தார். ஏற்கனவே மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 3 நபர்களை ஜாமீனில்விட நீதிமன்றம் மறுத்துள்ளது.

Tags

Next Story