தர்மபுர ஆதீன ஆபாச வீடியோ மிரட்டல் நபர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

தர்மபுர ஆதீன ஆபாச வீடியோ மிரட்டல் நபர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது.

மயிலாடுதுறையில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது சன்னிதானம் தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி பல கோடிபணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செம்பனார்கோயில், குடியரசு மற்றும் சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வினோத், ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், அகோரத்தின் குடியரசு ஆகியோரின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதேபோன்று செம்பனார் கோயில் குடியரசு ஜாமீன் மனுவும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வினோத் ஆகிய இருவரின் ஜாமீன் மனுவை மயிலாடுதுறை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவ்வழக்கில் மேலும் குற்றவாளிகள் ஆன செய்யாறு அதிமுக வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பிப்ரவரி 26ஆம் தேதி தாய்லாந்து தப்பி ஓடிவிட்டார் அவர் சென்ற பாஸ்போர்ட் மூலம் திரும்ப இந்தியா வரும்போது கைது செய்யப்படுவார், மேலும் ஆதீனத்தின் மெய் காவலர் செந்தில்,திருக்கடையூர் விஜயகுமார், போட்டோகிராபர் பிரபாகரன் உட்பட நான்கு பேரும் தலைமறாக இருப்பதால் தொடர்ந்து மற்ற நபர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Live Updates

Tags

Read MoreRead Less
Next Story