அதிக வாக்கு, மோடிக்கு கொடுக்கும் செருப்படி - செல்வப் பெருந்தகை

கரூரில் அதிகப்படியாக வாக்குகள் பெறுவதும், சேகரிப்பதும் மோடிக்கு கொடுக்கும் செருப்படி என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசிய சர்ச்சை பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகபட்சமாக பெரும் வாக்கு மோடிக்கு கொடுக்கும் செருப்படி- கரூரில் செல்வப் பெருந்தகை சர்ச்சை பேச்சால் பரபரப்பு.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை பகுதியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணிக்கு ஆதரவு கேட்டு பிரச்சார பொதுக்கூட்டம் தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, காங்கிரஸ் கரூர் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை சிறப்புரையாற்றினார். அப்போது, மண்ணின் மைந்தர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்படி சிறைப்படுத்தினார்களோ, அதே போல நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கையும் சிறைப்படுத்தியது மத்திய அரசு. சிறையில் வைத்து ஆறு மாதங்கள் ஆகியும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாததால், பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளீர்களே எனக்கூறி உச்ச நீதிமன்றம் நேற்று அவரை விடுவித்துள்ளது.

இதே போல செந்தில் பாலாஜியும் விடுதலையாவார். அவர் தேர்தல் களத்தில் வந்து களப்பணி ஆற்றுவார். தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்வார் என்று கூறிய அவர், இந்திய அளவிலும், தமிழகத்திலும் கின்னஸ் சாதனை பெறும் வகையில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்தியாவிலும், தமிழகத்திலும் முதன்மை தொகுதியாக கரூர் பாராளுமன்ற தொகுதி வெற்றி பெற வேண்டும். ஏனென்றால், நாம் இங்கு அதிகப்படியாக வாக்குகள் பெறுவதும், சேகரிப்பதும் மோடிக்கு கொடுக்கும் செருப்படி என்ற சர்ச்சை பேச்சை பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story