மயிலாடுதுறையில்  தலையை ஆட்டி நடனமாடிய சமயபுரம் யானை

மயிலாடுதுறையில்  தலையை ஆட்டி நடனமாடிய சமயபுரம் யானை

 பெண் யானை சுமித்ரா

மயிலாடுதுறை தருமபுரத்தில் நடைபெற்ற விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த சமயபுரம் சுமித்ரா யானை சிவாகம பாடசாலை மாணவர்கள் பாடலுக்கு நடனமாடியது

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனமடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருச்சி சமயபுரத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சுமித்ரா என்ற பெண் யானை தருமபுரம் ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது. கும்பாபிஷேக யாக பூஜையின்போது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு யானை சுமித்ரா தன் தலையை ஆட்டி நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story