தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் வாரணாசியில் கைது

தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் வாரணாசியில் கைது

கைது செய்யப்பட்ட செந்தில் 

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் 27 சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகளின் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி படம் பறிக்க முயன்ற வழக்கில் 9 நபர்கள் சேர்க்கப்பட்டனர் அதில் இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவரான ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் வாரணாசியில் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடாதிபதியான 27-வது சன்னிதானம் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம் 28ம்தேதி மயிலாடுதுறை போலீஸார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர் .பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், செம்பனார்கோயில் குடியரசு, ஸ்ரீநிவாஸ், ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டாவது நபராக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில் 4 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து‌ மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை போலீசார் வாரணாசிக்கு சென்று செந்திலை கைது செய்துள்ளனர்.

மேலும் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் முதல் முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு. கோரியிருந்தார். இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் வாதாடுகையில் செந்திலை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வாதிட்டதால் முன் ஜாமின் மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் தள்ளுபடி செய்தார். வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ள ஆதினத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் நாளை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story