12ஆம் தேதி ரமலான் பிறை தெரிந்தால் தேர்வு ரத்து: அமைச்சர்

12ஆம் தேதி ரமலான் பிறை தெரிந்தால் தேர்வு ரத்து: அமைச்சர்

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

12ஆம் தேதி ரமலான் பண்டிகை அன்று பிறை தென்பட்டால் பொது தேர்வு கிடையாது என்று மயிலாடுதுறையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ். வேட்பாளர் ஆர் சுதாவை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழகம் , புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சரின் அலைதான் வீசுகிறது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செல்கின்ற இடம் எல்லாம் மக்களிடம் பேராதரவு இருப்பதாகவும் ,

ஏப்ரல் 19ஆம் தேதி வரை ஏன் காத்திருக்க வேண்டும் வாக்கு பெட்டியை இன்றே வையுங்கள் வாக்கு செலுத்துகின்றோம் என்ற அளவிற்கு மக்களிடம் எங்களுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

பொதுத் தேர்வுகள் ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் , 12ம்தேதி அன்று பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது என கூறினார். மேலும் கூட்டணி கட்சிகள் சின்னங்களை கோரி விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் , நிச்சயமாக எந்த சின்னம் வழங்கினாலும் நாங்கள் வெற்றி பெற பாடுபடுவோம் என தெரிவித்தார்.

அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார் , அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல குளறுபடிகள் இருந்ததாகவும் அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தாமல் எங்களுடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான வேலைகளை செய்யும் பணியில் கண்ணும் கருத்துமாக உள்ளோம் என்றார்.

உடன் அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், அரசு கொறடா கோவி. செழியன் காங்கிரஸ் வேட்பாளர் சுதா, எம் பி, எம் எல் ஏக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story