மயிலாடுதுறையில் காங்., வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி ?...

மயிலாடுதுறையில் காங்., வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி ?...

ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், பொருளாதார நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தியின் பெயர் முதன்மையாக உள்ளது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணியில் காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியது. ஏற்கனவே இந்த தொகுதி திமுக வசம் உள்ளது. 48 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இத்தொகுதியை கைப்பற்றியிருந்தது. அதை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள திமுகவினர் கேட்ட நேரத்தில் காங்கிரசில் முக்கிய பிரமுகர் இத்தொகுதியில் நிற்பதற்கான வேலை நடைபெற்று வந்தது.

அதன் அடிப்படையில் மயிலாடுதுறை தொகுதியை திமுக தலைமை காங்கிரஸுக்கு ஒதுக்கியது. அந்த முக்கிய நபர்தான் சென்னையை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி(51) எம்பிஏ பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் வார்தன் பள்ளியில் பொருளாதாரம் படித்தவர். ஜப்பான் போன்ற நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியா திரும்பியதும் டாக்டர் மன்மோகன்சிங் ப. சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து பல்வேறு கட்டுரைகளை எழுதியவர். காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர். தொலைக்காட்சி நேர்காணல்களில் காங்கிரஸ் சார்பில் அடிக்கடி பங்கு பெறுபவர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட தரவுப் பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ளார்.

காங்கிரசு கட்சியை நவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமான 'சக்தி'யின் பின்னணியில் அவர் மூளையாக இருக்கிறார். அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவராகவும்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். ‍ இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு சிறந்த எழுத்தாளர் என கருதப்படுகிறவர். தற்போது டெல்லியில் இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இவர் பெயர் மயிலாடுதுறை தொகுதிக்கு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story