புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா - பணி மும்முரம்

X
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம் மயிலாடுதுறை மன்னன்பந்தல் பகுதியில் 4ஆம்தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார், அதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை 28 12 2020ல் அப்பொழுதைய முதல்வர் எடப்பாடியால் துவக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான நிலமும் தருமபுர ஆதீனத்திடமிருந்து நிலமும் பெறப்பட்டது. இந்நிலையில் 2021 இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூபாய் 140 கோடி நிதி ஒதுக்கியது அதன் அடிப்படையில் தரைத்தளம் மற்றும் ஏழு மாடி கட்டிடங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 4ஆம் தேதி அதன் திறப்பு விழா நடைபெற உள்ளது, அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் உட்பட பல்வேறு அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர் அதற்கான விழா ஏற்பாடுகளை அமைச்சர் மெய்ய நாதன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி, கோட்டாட்சியர் யுரேகா உட்பட அதிகாரிகளுடன் சென்று பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை மேற்கொண்டும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நேற்று மாலை ஆய்வு செய்தனர்.
Next Story
