செய்தியாளர்கள் - முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கடும் வாக்குவாதம்
செய்தியாளர் சந்திப்பு
மயிலாடுதுறை அருகே சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு வருகைதந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது பழமைவாய்ந்த சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு குழிதோண்டியபோது, ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன, அதனை அரசு கருவூலத்திற்கு எடுத்துச் செல்ல அரங முயன்றால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்றார். தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்துத் தற்போது படிப் படியாகச் செய்வதாக கூறுவது ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதாகவும் தற்போது தேர்தல் வருவதால் இரண்டு கட்சிகளும் ஏமாற்றி வருகின்றன, மூன்றாவது கட்சிக்கு வாக்கு அளிங்க என கூறினார், தமிழக முதல்வர், நான் கோவிலுக்குள்ள வரமாட்டேன், என் ஆளு வரானோ, என் வீட்டுகார அம்மா வருதோ எனக்குத் தெரியாதுனு சொன்னா, நான் ஏமாற மாட்டேன் என, தமிழக முதல்வரையும் அவரது குடும்பத்தையும் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். சுருக்கமாகக் கூறுங்கள் என தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கூறியதற்கு நீ இஸ்லாமியர் நீ எல்லாம் இங்கு வரக் கூடாது உனக்கு இங்கு வரத் தகுதி இல்லை வெளியே போ எனப் பேசினார் , இந்தச் செயல் கோவிலுக்கு வந்த பக்தர்களையும் செய்தியாளர்களையும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியது இதனால் செய்தியாளர்கள் பொன்மாணிக்கவேலுடன் வாக்குவாதம் செய்தனர், சீர்காழி பத்திரிகையாளர் சங்கம் பொன் மாணிக்கவேலுக்கு கண்டனம் தெரிவித்ததை யடுத்து அங்கிருந்து காரில் ஏறி விரைந்து சென்றார்.