மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலைக்கு அமைச்சர் மரியாதை

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலைக்கு அமைச்சர் மரியாதை
மாலை அணிவித்து மரியாதை
மயிலாடுதுறை நகர பூங்காவில் உள்ள மூவலூர் ராமாமிருதம் அம்மையார் சிலைக்கு தமிழக செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மயிலாடுதுறை நகராட்சி பூங்காவில் அமைந்துள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முழு உருவச்சிலைக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளனர்.

Tags

Next Story