மே.30ல் சர்ச்சைக்குரிய ஆதீன பட்டணப்பிரவேசம்

மே.30ல் சர்ச்சைக்குரிய ஆதீன பட்டணப்பிரவேசம்

தருமபுரி ஆதினம்

தர்மபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமந்து செல்லும் பட்டணபாபிரவேச நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆதீனத்தின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயிலில் மே 20-ஆம் தேதி உற்சவ கொடி ஏற்றப்பட்டு, பதினோராம் திருநாளான மே 30-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்கள் தூக்கிச் செல்லும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ளது. 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கு மனிதனை மனிதன் சுமப்பதா? என திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக த.நா அரசு பட்டணப்பிரவேசத்திற்கு தடை விதித்தது. மீண்டும் தடை விலக்கி கொள்ளப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆதீனத்தை சிவிகை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தோளில் சுமந்து சென்ற பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. சென்ற ஆண்டு எந்த ஆட்சேபனையும் எந்தப் பிரச்சினையும் இன்றி பட்டண பிரவேசம் அமைதியாக நடந்து முடிந்தது. மயிலாடுதுறை ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ காட்சி இருப்பதாக கூறி பணம் கேட்டு ஆதீனத்தை கொல்ல முயற்சி நடந்ததாகவும் அதில் ஈடுபட்ட 8 நபர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆபாச வீடியோ உண்மையா பொய்யா என்று போலீசார் 2 மாதத்திற்கு மேலாக ஆய்வு செய்துகொண்டே இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட மூன்று பேர் இதுவரை கைது செய்யப்படாமல் தேடப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே மனிதனை பள்ளத்தில் வைத்து மனிதன் தோளில் சுமக்கும் பட்டணப்பிரவேசம் இந்த ஆண்டும் நடத்தப்போவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story