தமிழக வேளாண் பட்ஜெட் டெல்டா பாசனதாரர் சங்கம் வரவேற்பு

தமிழக வேளாண் பட்ஜெட் டெல்டா பாசனதாரர் சங்கம் வரவேற்பு

குரு கோபி கணேசன் 

டெல்டா மாவட்டங்களில் 5338 கிலோமீட்டர் தூர்வார தொகை ரூபாய் 110கோடி! சிறப்பு திட்டமாக திருச்சி தஞ்சை நாகை திருவாரூர் கடலூர் அரியலூர் மாவட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வார தொகை ரூபாய் 10கோடி!
தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது 42,281 கோடி ரூபாய் அளவில் போடப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை துறை மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய துறைகளான கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, நீர்வளத்துறை ஆகியவற்றையும் உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக வெளிவந்துள்ளது! நிதிநிலை அறிக்கையை உள்ளபடியே விவசாயிகளாகிய நாங்கள் வரவேற்கிறோம். 2024- 25 கான கூட்டுறவு பயிர் கடன் இலக்கு ரூபாய் 16,500 கோடி. பயிர் காப்பீடு திட்டம் ஒதுக்கீடு தொகை ரூபாய் 1775 கோடி! டெல்டா மாவட்டங்களில் 5338 கிலோமீட்டர் தூர்வார தொகை ரூபாய் 110கோடி. சிறப்பு திட்டமாக திருச்சி தஞ்சை நாகை திருவாரூர் கடலூர் அரியலூர் மாவட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வார தொகை ரூபாய் 10கோடி. கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 215 வீதம் ஒதுக்கீடு ரூபாய் 250 கோடி. இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு ரூபாய் 7000 கோடி. நுண்ணுயிர் பாசனம் அமைக்க ரூபாய் 773.23 கோடி. சிறு, குறு விவசாயிகள் வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்க மானியம் தொகை ரூபாய் 170 கோடி! தமிழக முதல்வர் அவர்களின் புது திட்டமான மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட ஒதுக்கீடு ரூபாய் 206 கோடி . மேலும் விவசாயிகளின் நலன் கருதி ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் -கலைஞரின் ஒருங்கிணைந்த -தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டம் விவசாயிகளுக்கான நல்ல பல திட்டங்கள் வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதால் விவசாயிகளின் சார்பாக வரவேற்பினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம் என காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குரு கோபி கணேசன் தெரிவித்துள்ளார்

Tags

Next Story