ஓஎன்ஜிசி ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்-ஜெயராமன்

ஓஎன்ஜிசி ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்-ஜெயராமன்
பேராசியர் ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு 

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஓ என் ஜி சி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு நீரியல் விரிசல் முறையில் 70 விதமான ரசாயன பொருள், மணல், 13 லட்சம் லிட்டர் தண்ணீர் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை நிலத்தில் பீச்சி அடித்து அங்கே செயற்கை பூகம்பத்தை உருவாக்கி, அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரில் ஹைட்ரோ கார்பனை எடுப்பது திட்டமாகும், இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும், ஏற்கனவே வறட்சி மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டம், இதனால் பாலைவனமாகிவிடும் அளவுக்கு நிலத்தை பாழ்படுத்தி விடும். ஆகவே தமிழக அரசு அறிமுக நிலையிலேயே ஓஎன்ஜிசி விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் நவம்பர் 15-ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம், மற்றும் கடலூர் மாவட்டங்களில் தொடர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story