மயிலாடுதுறைக்கு வந்த கன்னியாகுமரி- பனாரஸ் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரி- பனாரஸ் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார பண்பாடு இருந்து வந்துள்ளதை, இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில், ஒரு மாத விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் 2 விழாவை ,நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவை ஒட்டி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக காசிக்கு கன்னியாகுமரி பனாரஸ் புதிய வாராந்திர ரயில் வரும் 28ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் சிறப்பு சேவையை காசியில் இருந்தவாறு, பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக நேற்று மாலை ,5.30 மணிக்கு தொடங்கி வைத்தார்.
காசி தமிழ் சங்கமம் டு பனாரஸ் ரயில் இன்று காலை 5.15 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேர்ந்தது. மயிலாடுதுறைக்கு வந்த பானாரஸ் ரயிலுக்கு பாஜகவினர் மற்றும் மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தலைமையில் கோவி சேதுராமன், நாஞ்சில் பாலு, சுந்தரம், ஆகியோரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 5. 25 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு நெல்லூர் வழியாக நாளை, இரவு 11:35 மணிக்கு காசி சென்றடைகிறது.
