விஜயகாந்த் மறைவு - மயிலாடுதுறையில் முழு கடையடைப்பு

விஜயகாந்த் மறைவு -  மயிலாடுதுறையில் முழு கடையடைப்பு

கடையடைப்பு 

விஜயகாந்த் மறைவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12மணிவரையிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் ஆகிய பகுதிகளில் 2மணிநேரம் கடையடைப்பு செய்துள்ளனர். செம்பனார்கோவில் ஆக்கூர், திருக்கடையூர் தரங்கம்பாடி, பொறையார் பகுதிகளில் மதியம் 2 மணிமுதல் மாலை 5மணி வரை கடையடைப்பு செய்ய உள்ளனர்.

Tags

Next Story