இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது - TVS நிறுவனம் | கிங் நியூஸ் 24x7

Update: 2025-01-30 11:18 GMT
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது -  TVS நிறுவனம் | கிங் நியூஸ் 24x7

(TVS Motor) 

  • whatsapp icon

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பேட்டரியில் இயங்கும் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவற்றிற்கு மட்டுமல்ல மின்சாரத்தில் இயங்கும் பிற பிரிவைச் சார்ந்த வாகனங்களுக்கும் வரவேற்பு மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால்தான் வாகன உற்பத்தியாளர்கள் கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.


இந்த மாதிரியான சூழலிலேயே தமிழகத்தைச் சேர்ந்த ஓர் நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர கார்கோ ரக வாகன உற்பத்தியில் தன்னுடைய காலடி தடத்தை பதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor)-தான் அந்த நிறுவனம் ஆகும்.


ஏற்கனவே இந்த நிறுவனம் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. இந்தமாதிரியான சூழலிலேயே அது மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர கார்கோ ரக வாகன (Electric Three Wheeler Cargo Vehicle) உற்பத்தியிலும் களமிறங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.


நிறுவனத்தின் மின்சார வாகன பிரிவின்கீழ் இப்போதைய நிலவரப்படி இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் மற்றும் ஓர் பயணிகள் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சா ஆகியவை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒரு கார்கோ மின்சார வாகனம்கூட விற்பனையில் இல்லை. இந்த குறையையும் போக்கும் முயற்சியிலேயே டிவிஎஸ் நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள் டிவிஎஸ் நிறுவனம் அதன் மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர கார்கோ வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மூன்று சக்கர வாகன பிரிவில் டிவிஎஸ் நிறுவனம் 10 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருக்கின்றது.


Tags:    

Similar News