குறைந்த வசூலை பெற்ற இந்தியன் 2 !!

Update: 2024-07-20 06:33 GMT

இந்தியன் 2

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கமல்ஹாசன்- ன் இந்தியன் 2 திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான நிலையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படத்தில் கமல், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, ஜெகன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

படத்தின் நீளம் மக்கள் கருத்தாக இருந்த நிலையில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்திலிருந்து 11 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு புதிய வெர்ஷன் ஆப் இந்தியன் 2 திரையிடப்பட்டு வருகிறது.

இந்தியன் 2 திரைப்படம் உலக அளவில் கடந்த எட்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இப்படம் ரூபாய் 146 கோடி வரை உலக அளவில் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்கள் காரணமாக படத்தின் வசூல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News