"ஆடு ஜீவிதம்" திரைப்படம் வசூல் சாதனை !

Update: 2024-04-06 11:27 GMT

ஆடு ஜீவிதம்

இயக்குனர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாக்கியது. படத்தை பார்த்துவிட்டு திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார்.

ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும். இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.

படம் வெளியாகி முதல் நாளிலயே இந்தியளவில் 7.5 கோடி வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்தை பெற்று பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆடு ஜீவிதம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது."Aadu Jeevidam" film collection record

ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News